உள்ளூர் செய்திகள்

காதலர்கள் தற்கொலை

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்து பாண்டி மகன் ஆகாஷ், 22. எலக்ட்ரீசியன் . இவரும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த ஆகாஷ் அவர் வீட்டிற்கு சென்றார். நேற்று மதியம் 1:00 மணிக்கு வெளியில் சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி கிடந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் சிறுமி, ஆகாஷ் இருவரும் துாக்கிட்டு இறந்து கிடந்தனர்.போலீசார் இருவரின் உடலையும் மீட்டனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி