வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தினமலர் மக்களின் கோரிக்கைகளை எடுத்து சொல்வது சிறப்பு
ராஜபாளையம், : பருவமழை தொடங்கி கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இதன் ஆதாரமான ஷட்டர்களை பழுது பார்த்து பராமரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பருவ மழை தொடங்கியது பல்வேறு பகுதிகளிலும் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில் குடிநீருக்கான நீர்த்தேக்கங்கள் பெருகிய நிலையில் மழை தொடர்வதால் கண்மாய்களுக்கு கூடுதல் மழை நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்கநிலை கண்மாய்கள் மறுகால் பாயும் நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அடுத்தடுத்துள்ள பெரிய கண்மாய்களும் நீர்வரத்து காணப்படும்.இந்நிலையில் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேற்றுவதற்கான ஷட்டர்கள் முறையாக இயக்கும் வகையில் வைக்கப்படுவதில்லை. ஏற்கனவே கண்மாய்களில் பாசன பகுதிக்கு திறந்து விடப்படும் மடைகள் பராமரிப்பு இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றிற்கு முறையாக கிரீஸ் வைத்தும் பழுதுகளை தகுந்த இடைவேளையில் சரிபார்ப்பதைகண்காணிப்பதில்லை. 20 சதவீத ஷட்டர்கள் திறக்கவும் அசைக்க முடியாமலும் பயனற்று காணப்படுகின்றன.ஏற்கனவே கடந்த ஆண்டு ராஜபாளையம் பகுதியில் பெய்த பெருமழையால் ஷட்டர்கள் போதிய அளவு திறக்க முடியாமலும், பழுது காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.வருவாய்த் துறையினர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகள் பாதிக்கும் அபாயம் இருந்ததால் கண்மாயின் கரையை உடைத்துதண்ணீரை முழுவதும் வெளியேற்றினர்.இதற்கு ஷட்டர்களின் திறக்கும் அமைப்பு முழுமையான அளவில் பராமரிப்பு இல்லாததும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக திறந்து விட முடியாததும் காரணமாக கூறப்பட்டது.எனவே பருவ மழை அதிகரிப்பிற்கு முன்பாக மீதமுள்ள கண்மாய்களின் நீர் தேக்கவும், உபரி நீர் வெளியேற்றவும் ஷட்டர்களை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் மக்களின் கோரிக்கைகளை எடுத்து சொல்வது சிறப்பு