மம்சாபுரம் ரோட்டை அகலப்படுத்த வேண்டும்: எம்.எல்.ஏ., கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் செல்லும் ரோட்டினை காலதாமதமின்றி உடனடியாக அகலப்படுத்தும் பணிக்கு நிதி உதவி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.எல்.ஏ. மான்ராஜ் கூறியுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கம்மாபட்டி, காந்தி நகர், மம்சாபுரம், இடையன்குளம் வழியாக புதுப்பட்டி வரை வாகன போக்குவரத்து தினமும் அதிகரித்து வரும் நிலையில் இந்த ரோட்டினை அகலப்படுத்த வேண்டுமென ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடரில் கோரிக்கை விடுத்திருந்தேன்.இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்துள்ள நிலையில் உடனடியாக திட்டத்திற்கு அனுமதி அளித்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் காலதாமதம் இன்றி துவங்கி, விரைவில் செய்து முடிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.