உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கொலை வழக்கு சாட்சியை மிரட்டி தாக்கியவர் கைது

கொலை வழக்கு சாட்சியை மிரட்டி தாக்கியவர் கைது

நரிக்குடி: நரிக்குடி பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகவேல் 41. இவர் 2018ல் ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். 5க்கு மேற்பட்டவர்கள் மீது அ.முக்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த கணேஷ் பிரகாஷ் 27, சாட்சியாக இருந்து வருகிறார். இவ்வழக்கில் 2வது நபராக சேர்க்கப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் 32, ஜாமினில் வெளியில் வந்தார். சாட்சியாக உள்ள கணேஷ் பிரகாசை அடிக்கடி மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் சாட்சி சொல்ல வரக்கூடாது என தகாத வார்த்தையில் பேசி, தாக்கினார். அ. முக்குளம் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ