மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
30-Jul-2025
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆராய்ச்சிபட்டி தெருவை சேர்ந்த பாண்டிகணேஷ் 31. ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் ரமேஷ் பாபுவை தாக்கினார். இவர் மீது டவுன் போலீசார் ஜூலை 7ல் வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவர் இது போன்ற குற்றச் செயல்களிலும், பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை தடுக்கும் வகையில் எஸ்.பி., கண்ணன் பரிந்துரையில், கலெக்டர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் பாண்டிகணேஷ் குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
30-Jul-2025