உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மந்தை அம்மன் கோயில் பங்குனி பொங்கல்

மந்தை அம்மன் கோயில் பங்குனி பொங்கல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் மந்தை அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.முன்னதாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஆண்கள், பெண்கள் அம்மன் உருவம், அஷ்ட லட்சுமிகள், குதிரையில் கருப்பசுவாமி, உடுக்கை சூல உருவம் கொண்ட மந்தை மாரியம்மன் உருவங்களை செய்து, மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். கோயில் பூஜாரி நாக்கில் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டினார். ஊர்வலம் அய்யனார் கருப்பசுவாமி கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பெண்கள் கும்மியடித்தனர். அதன்பின் வரிசையாக பெரிய கண்மாயில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை