உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் பட்டேல்ரோட்டில் மேன்ஹோல் ‛லீக்

விருதுநகரில் பட்டேல்ரோட்டில் மேன்ஹோல் ‛லீக்

விருதுநகர்: விருதுநகரில் பட்டேல் ரோட்டில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல் லீக்' ஆவதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே பட்டேல் ரோட்டில் ஏராளமான குடியிருப்பு உள்ளது. இங்குள்ள பாதாளச்சாக்கடையின் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் தொடர்ந்து வெளியேறுகிறது. கனரக வாகனங்கள் வந்து செல்லும் ரோடாக இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி பள்ளங்களால் நிறைந்துள்ளது. இந்த பள்ளத்தில் தற்போது கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பாதாள சாக்கடையில் தேங்கும் மண்ணை முறையாக அகற்றாததால் கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக வெளியேறுகிறது. இதனால் மதுரை, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், சிவகாசி, சாத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து ரயிலில் வந்து இறங்கி பட்டேல் ரோடு வழியாக அரசு மருத்துவமனைக்கு தினசரி வந்து செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பட்டேல் ரோட்டில் மேன்ஹோல் லீக் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ