உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மணிமேகலை மன்ற ஆண்டு விழா

மணிமேகலை மன்ற ஆண்டு விழா

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மணிமேகலை மன்ற 68 வது ஆண்டுவிழா நடந்தது. தலைவர் கோதண்டம் தலைமை வகித்தார். கிருஷ்ண பிரசாத், கரிசல் இலக்கிய செயலாளர் டாக்டர் அறம் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். அகில இந்திய குடிமை பணி பயிற்சி மைய முதல்வர் சரவணன், மாவட்ட முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர். எழுத்தாளர்கள் தமிழ் குமரன், தமிழினியன், கதிர் மதியன், எழிலரசு சதீஷ் முத்து கோபால் சிறந்த சேவையாளர்கள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள், நகர் பிரமுகர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் பாரதி பீமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை