மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்..
22-Feb-2025
தளவாய்புரம்: ம.தி.மு.க., சார்பில் செட்டியார் பட்டி பேரூராட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.அவை தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சரவணன் பொருளாளர் ஞானகுரு முன்னில வகித்தனர். பேரூராட்சி செயலாளர் நாகப்பன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் பேசினார். மாநில சிறுபான்மை பிரிவு காதர் மைதீன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசங்கர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரி ரத்து செய்ய முயற்சி மேற்கொண்ட துறை வைகோவிற்கு நன்றி தெரிவிப்பது உட்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
22-Feb-2025