| ADDED : டிச 06, 2025 05:13 AM
அருப்புக்கோட்டை, டிச. 6- அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. இதில், அறிவுசார் குறைபாடு, காது கேளாமை, கை, கால் குறைபாடு, பார்வை குறைபாடு கொண்ட 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை மைய மேற்பார்வையாளர் அருஞ்சுனை மணி, ஒருங்கிணைப்பாளர் வள்ளி இந்திரா, ஆசிரியர் பயிற்றுநர்கள் வினோதா, காளீஸ்வரி, நாகலட்சுமி, சுப்பையா செய்தனர். சிறப்பு பயிற்றுநர்கள் கார்த்திகை ஜோதி, ஜெய கிறிஸ்டி, மீனாள், பொற்கொடி, வெர்ஜீனியா, இயன் முறை மருத்துவர் செல்வம் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். ____