உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்

ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பெரியாதி குளம்கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதி குளம் கண்மாயை ஸ்ரீவில்லிபுத்துார் யூனியன் பராமரிப்பின் கீழ் உள்ள இக்கண்மாயை ஆதாரமாக கொண்டு நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இது தவிர சுற்றியுள்ள அண்ணாநகர், பச்ச மடம், எம்.ஆர் நகர், ஐ.என்.டி.யூ.சி நகர் குடியிருப்புகளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலர் வாகனத்தில் வந்து மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இதில் பயன்படுத்திய ஊசி, காலாவதி மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உடைகள், பஞ்சு, ரத்தம் தோய்ந்த மருத்துவ கழிவுகள் உள்ளதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. கண்மாய் கலுங்கு அருகே கொட்டப்பட்டுள்ளதால் நீர்வரத்தின் போதும் விவசாயத்தின் போது பாதிப்பு ஏற்படும். மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த விதிகள் உள்ள நிலையில் கழிவுகளை கொட்டி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ