மைக் செட் ஊழியரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் டொமினிக், 70, மைக் செட் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரகாஷ், 45, என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தைக்கு உதவியாக மைக் செட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சந்தைப்பேட்டை தெருவில் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சாக்கு மூடையில் கட்டப்பட்டு கிடந்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடியதில் யாரும் சிக்கவில்லை. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.