உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மினர்வா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

 மினர்வா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மினர்வா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த ஆண்டு விழாவில் தாளாளர் கண்ணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வேணி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் டிரஸ்ட் நிறுவனர்கள் வெங்கடசுப்பிரமணியன், ராஜேஷ் கண்ணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பொது தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தடகளம், டேபிள் டென்னிஸில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. பரதம், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை