உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொடர் தாக்குதலுக்கு எதிராக ஓரணியில் இயக்கம் அமைச்சர் தங்கம் தென்னரசு

தொடர் தாக்குதலுக்கு எதிராக ஓரணியில் இயக்கம் அமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி : தமிழகத்தின் மீது மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்திற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மல்லாங்கிணரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ல் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்தார். தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதி விடுவிக்காமல் இருப்பது, தொகுதிகளை குறைப்பது போன்ற தொடர் தாக்குதலை எதிர்க்கத்தான் இந்த இயக்கம். 70 நாட்களில் ஒரு கோடி குடும்பங்களை ஒருங்கிணைத்திருக்கிறது. மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் இருக்கக்கூடிய 813 ஓட்டுச்சாவடிகள் 3 லட்சத்து 10 ஆயிரம் வாக்காளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். செப். 17ல் கரூரில் நடக்கக்கூடிய முப்பெரும் விழாவில் தீர்மானங்களை முன்மொழிந்து முதல்வர் நிறைவேற்றித் தர உள்ளார். செப்., 20ல் தீர்மானங்களை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். மதவாத சக்தியிலிருந்து விடுவித்து தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்யக் கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை