உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் நவ. 14ல் புத்தகத் திருவிழா அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர்

விருதுநகரில் நவ. 14ல் புத்தகத் திருவிழா அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர்

விருதுநகர்: விருதுநகரில் நவ. 14ல் நான்காவது புத்தகத் திருவிழா நடக்கிறது. அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்கி வைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருள்காட்சி மைதானத்தில் நவ. 14 முதல் 24 வரை நடக்கவுள்ள நான்காவது புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மாலை 5:00 மணிக்கு துவக்கி வைக்கின்றனர். புத்தகத் திருவிழாவில் தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடக்கும். சுந்தர ஆவுடையப்பன், எம்.பி., தமிழச்சி, சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் ஜெயசீலன், டாக்டர் அறம், அன்னக்கொடி,கவிஞர் நாகா, மணி மாதவி பேசுகின்றனர். நவ. 17ல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 18 ல் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் பட்டி மன்றம், 19ல் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, 20ல் கவிஞர்கள் கவிதா ஜவஹர், கண்மணி ராசா 21ல் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா என பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பேசுகின்றனர். மக்கள் இந்த புத்தகத்திருவிழாவில் பங்கேற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா கேட்டுக் கொண்டார்.

தினமலர் சந்தா ரூ.1999 செலுத்தினால் ரூ.1000 மதிப்பில் புத்தகங்கள் இலவசம்

புத்தகக் கண்காட்சியில் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் சந்தா ஒன்று பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால் ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கான காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ