உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜாதி சான்றிதழில் புத்தம் இடம் பெறாததற்கு வலைத்தளத்தில் வசதியில்லாததே காரணம்;   சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்

ஜாதி சான்றிதழில் புத்தம் இடம் பெறாததற்கு வலைத்தளத்தில் வசதியில்லாததே காரணம்;   சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்

விருதுநகர் : புத்த மதத்தை தழுவியர்களுக்கு ஜாதி சான்றிதழில் 'புத்தம்'என்ற வார்த்தை இடம் பெறாததற்கு வலைத்தளத்தில் வசதியில்லாததுதான் காரணம், அரசுக்கு புகார் அனுப்பி உள்ளோம் என மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பாதிரியார் அருண் கூறினார். விருதுநகரில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். ஆணையத்தலைவர் பாதிரியார் அருண் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் முக்கிய கோரிக்கையாக உள்ள கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். தனி நபர் கோரிக்கையான நலத்திட்டம், வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து தீர்வு காணப்பட்டது. சிறுபான்மையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிகள், நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புத்த மதத்தினருக்கு ஜாதி சான்றிதழில் 'புத்தம்'என்ற வார்த்தைகுறிப்பிடாமல் ஹிந்து என்ற வார்த்தை பயன்படுத்துவதற்கு வலைத்தளத்தில் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது தான் காரணம். இது குறித்து புகார் அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். எஸ்.பி., கண்ணன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிறுபான்மையினர் நலத்துறை துணை இயக்குனர் ஷர்மிளி, ஆணையத் துணைத்தலைவர் அப்துல்குத்தூஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை