உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மொபைல் போன் பறிப்பு

மொபைல் போன் பறிப்பு

மொபைல்போன் பறிப்பு

வத்திராயிருப்பு: கூமாபட்டி மேல தெருவை சேர்ந்தவர் மனோஜ் கண்ணன், 28, தனியார் ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு கூமாபட்டி பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் நடந்து சென்றார். அப்போது கீழதெருவை சேர்ந்த சரவணன்,ராஜேஷ் மற்றும் இருவர் சேர்ந்து அவரது, ரூ. 89 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை பறித்து சென்றனர். போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

டிரைவர் கைது

சாத்துார்: சாத்துார் -கோவில்பட்டி நான்கு வழிச்சாலையின் மேற்கு பகுதி சர்வீஸ் ரோட்டில் உள்ள சடையம்பட்டி சாய்பாபா கோயில் அருகே 55 வயது மதிக்கதக்க மன நலம் பாதித்தவர் அடையாளம்தெரியாத கார் மோதி ஆக. 19ல் பலியானார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி சேர்ந்தசெல்லத்துரை மகன் பார்த்திபன், 28. ஓட்டி வந்த கார் மோதி மனநலம் பாதித்தவர் பலியானது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாத்துார் தாலுகா போலீசார்அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்பனை; இருவர் கைது

சேத்துார்: சேத்துார் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும் படி நின்றிருந்த இருவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். இதில் வலையர் புதுத்தெருவை சேர்ந்த மலையரசன் 26, முத்துப்பாண்டி 25, இருவரும் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து மாணவர்களிடம் விற்க முயன்றது விசாரணையில் தெரிந்தது. சேத்துார் போலீசார் கஞ்சாவை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.

பட்டாசு பறிமுதல்: 6 பேர் கைது

சாத்துார்: வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். தாயில்பட்டி ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி, 39. நாகராஜ், 44. ஆகியோர் அரசு அனுமதியின்றி பட்டாசு திரியும். சூரார்பட்டியை சேர்ந்த தர்மலிங்கம், 41. முறையான அனுமதியின்றி மண் குண்டாம்பட்டியில் பெட்டிக்கடையில் பேன்சி ரக பட்டாசுகளை விற்பனை செய்தார். மேலும் வெற்றிலையூரணியை சேர்ந்த சுப்புராஜ், 43. வீட்டில் வைத்து கார்டூன் பட்டாசுஉற்பத்தி செய்தார். சேதுராமலிங்கபுரம் நாயகி பயர் ஒர்க்ஸ் பின்புறம் காட்டுப் பகுதியில் தகர செட்டு அமைத்து மாதாங்கோவில்பட்டி கணேசன், 48. சிவகாசி சக்தி ராஜ், 49. ஆகியோர் புல்லட் பாம் பட்டாசு தயாரித்தனர். ரோந்து சென்ற வெம்பக்கோட்டை போலீசார் இவர்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் 6 பேரையும் கைது செய்தனர்.

பெண் பலி

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் வடக்குத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகா 38. இவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ