உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., திருவண்ணாமலையில் நாய்கள் கடித்து குரங்கு பலி

ஸ்ரீவி., திருவண்ணாமலையில் நாய்கள் கடித்து குரங்கு பலி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் நாய்கள் கடித்ததில் குரங்கு ஒன்று உயிரிழந்தது.திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் அடிவாரம் முதல் மலை உச்சி வரை குரங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவ்வப்போது சில குரங்குகள் சண்டை இட்டுக் கொண்டும், நாய்களை விரட்டிக் கொண்டும் அச்சுறுத்தி வந்தது இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வீதி அடைந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் நான்கு வயது ஆண் குரங்கு ஒன்று கோயிலுக்கு படி ஏறும் மலைப்பாதையில் நாயை விரட்டி கடித்தது. இதனை கண்ட மற்ற நாய்கள் ஒன்று கூடி குரங்கை கடித்ததில் குரங்கு சம்பவ இடத்தில் பலியானது.ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் இறந்து போன குரங்கின் உடலை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று போஸ்ட்மார்ட்டம் செய்து அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை