உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காலை முதல் மாலை வரை சாரல்

காலை முதல் மாலை வரை சாரல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை துாறலாக பரவலான மழை பெய்தது.மாவட்டத்தில் காலை 6:00 மணி முதலே மழை பெய்ய துவங்கியது. பருவநிலை மாற்றத்தாலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாலும், மே முடியும் முன்பே மழை அவ்வப்போது பெய்து வருகிறது.இந்நிலையில் காலை முதல் பகல் நேரங்களிலும் விட்டு விட்டு துாறலாக மழை பெய்தது. இதனால்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வானிலை மேகமூட்டத்துடனே காணப்பட்டதால் வெப்பம் இன்றி குளுமையான சூழல் காணப்படுகிறது.மாலையும் அவ்வப்போது துாறல் பெய்தது. ஆங்காங்கே ரோடுகளின் பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சாத்துார், காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு பரவலாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை