உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியில் சிதிலமடைந்த அம்மா பூங்கா

திருச்சுழியில் சிதிலமடைந்த அம்மா பூங்கா

திருச்சுழி: திருச்சுழியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.திருச்சுழி முத்துராமலிங்கம் நகர் குடியிருப்பில் அம்மா பூங்கா ,உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. பூஞ்செடிகள், நடைபாதை, உட்கார இருக்கைகள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு விளையாட்டு கருவிகள், உடற்பயிற்சி கருவிகள் உள்ளிட்டவைகளுடன் இயங்கி வந்தது.திருச்சுழி பகுதி மக்களுக்கு பொழுதுபோக்குவதற்கு வசதிகள் இல்லாத நிலையில் இந்த பூங்கா நன்கு பயன்பட்டு வந்தது. மாலை நேரங்களில் குழந்தைகளுடன் வாக்கிங் செல்ல மக்கள் இங்கு வருவர். இளைஞர்கள் இங்குள்ள உடற்பயிற்சி கருவிகள் மூலம் பயிற்சி எடுத்து வந்தனர்.இந்நிலையில் பூங்கா பராமரிப்பு இன்றி போனதால் முட்புதர்கள் வளர்ந்து குப்பை கொட்டப்படும் இடமாக மாறிவிட்டது. முட்செடிகள் அதிகம் உள்ளதால் குழந்தைகள் விளையாட முடிவதில்லை. வாறுகால் கழிவுநீர் பூங்காவில் வந்து சேர்வதால் துர்நாற்றம் எடுக்கிறது. பாம்புகள், விஷ பூச்சிகள் வாழும் இடமாக பூங்கா மாறிவிட்டது. விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மக்களுக்கு நன்கு பயன்பட்டு வந்த அம்மா பூங்காவை மாவட்ட நிர்வாகம் மீண்டும் பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ