உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அகலமில்லாத லட்சுமியாபுரம்- எம்.புதுப்பட்டி ரோடு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

அகலமில்லாத லட்சுமியாபுரம்- எம்.புதுப்பட்டி ரோடு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு தாலுகா கிருஷ்ணன்கோவில் லட்சுமியாபுரத்தில் இருந்து எம்.புதுப்பட்டி வரை செல்லும் தார் ரோடு போதிய அகலமில்லாமல் இருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மதுரை -செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள கிருஷ்ணன்கோவிலின் கிழக்கு பகுதியில் லட்சுமியாபுரம், ரெங்கபாளையம் மங்கலம், கோபாலன்பட்டி, எம்.புதுப்பட்டி உட்பட பல கிராமங்கள் உள்ளது. மேலும் பல்வேறு பட்டாசு ஆலைகள் உட்பட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதற்காக ஏராளமான மக்களும், வாகனங்களும் இந்த ரோட்டில் பயணித்து வருகின்றனர்.ஆனால் இந்த ரோடு போதிய அகலமில்லாமல் பஸ்கள் எளிதாக பயணிக்க முடியவில்லை. கனரக வாகனங்கள் வந்தால் டூவீலர்கள் கூட மண் ரோட்டில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, லட்சுமியாபுரத்தில் இருந்து மங்கலம், புதுப்பட்டி வழியாக ஆமத்தூர் வரை ரோட்டை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை