உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறந்த வெளியில் குப்பையால் பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்

திறந்த வெளியில் குப்பையால் பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்

விருதுநகர் : விருதுநகர் நகர், ஊரக பகுதிகளில் டிராக்டர்களில் கொண்டு செல்லப்படும் குப்பையை தார்ப்பாய் போட்டு மூடாமல் அப்படியே கொண்டு செல்வதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.மக்கள் தொகை பெருக்கத்தால் குப்பையும் பெருகி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருப்பது அதை முறைப்படி திடக்கழிவு மேலாண்மை, நுண்ணுரமாக்கல் மையம் மூலமும், மறு சுழற்சி மூலமும் குறைப்பது தான். இத்தகைய சூழலில் குப்பையை தினசரி நகராட்சி, அதை யொட்டியுள்ள ஊராட்சிகள் தங்களின் டிராக்டர்கள் மூலம் குப்பை கிடங்கு, திடக்கழிவு மேலாண்மை கிடங்கு போன்றவற்றிற்கு கொண்டு செல்கின்றனர்.இவற்றை முறைப்படி தார்பாய் போட்டு மூடுவது கிடையாது. இந்த பிரச்னைக்கு தீர்வே இல்லாத சூழல் உள்ளது. நகராட்சி, ஊராட்சிகளில் அதிகம் உள்ளது. வாகன ஓட்டிகள் முகத்தில் குப்பை படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற டிராக்டர்களுக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளதா என அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டும் இது போன்று தொடர்ந்து செய்வது தெரிந்து எச்சரிக்கை செய்ய வேண்டும். குப்பை பறப்பதால் ரோடுகளில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தார்பாயை பயன்படுத்தவும், மக்களை பாதிக்காமல் குப்பை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ