உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டை பாலத்தில் துருபிடித்த மின்கம்பங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

அருப்புக்கோட்டை பாலத்தில் துருபிடித்த மின்கம்பங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

விருதுநகர்: விருதுநகரில் அருப்புக்கோட்டை பாலத்தில் மின்கம்பங்கள் துருபிடித்த நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.அருப்புக்கோட்டை பாலம் மக்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகும். அருப்புக்கோட்டை செல்லவும், தண்டவாளத்தை கடக்கவும் பெரிய அளவில் உதவியாக உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தில் மின்கம்பங்கள் துருபிடித்து மோசமான நிலையில் உள்ளது.இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எப்போது வேண்டுமானால் விழும் என்ற அச்சம் உள்ளது. இதை உடனடியாக மாற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை