உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு வந்தே பாரத் ரயில்களும் விருதுநகரில் நிற்க வலியுறுத்தல் எம்.பி., மாணிக்கம் தாகூர்

இரு வந்தே பாரத் ரயில்களும் விருதுநகரில் நிற்க வலியுறுத்தல் எம்.பி., மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: 'விருதுநகரில் இரு வந்தே பாரத் ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்படும்,' என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா தேர்தலில் 80 முதல் 120 தொகுதிகளில் திருட்டு தனம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் இரு தொகுதிகளில் மட்டும் 35 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து விளக்கம் அளிக்காமல், 'சிசிடிவி' பதிவுகள் கொடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் வந்தே பாரத் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகரில் இரு வந்தே பாரத் ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்படும்.மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தவறாக தமிழை படித்து சென்றார். அரசாங்கத்திடம் உள்ள கோயில் நிலங்களை தனி நபர்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதே ஆர்.ஆர்.எஸ்., எண்ணமாக உள்ளது. மாநாட்டிற்கு செலவளித்த ரூ.20 கோடியை வைத்து பலருக்கு நல்லது செய்திருக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை