உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேறும் சகதியுமான தற்காலிக பஸ்ஸ்டாண்ட்

சேறும் சகதியுமான தற்காலிக பஸ்ஸ்டாண்ட்

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் தற்காலிகமாக இயங்கி வரும் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் பஸ் ஏற சிரமப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோட்டில் உள்ளது. கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இடித்து விட்டு புதிய நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. அதுவரை அருகில் பஸ்கள் வந்து செல்ல தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டது. இது மேடும் பள்ளமுமாக இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து சேறும் சகதியும் ஆக மாறி விடுகிறது. பயணிகள் பஸ்கள் ஏற சிரமப்படுகின்றனர். பலர் சேற்றில் வழுக்கி விழுந்து உள்ளனர். எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளும் மந்த கதியில் நடக்கிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை