உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு முத்தாலம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், திருஷ்டி கழித்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தேர் மதியம் 3:00 மணிக்கு நிலையம் சேர்ந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டு, சிறப்பு பூஜைகளும், இரவு மாவிளக்கு வழிபாடு, பிரியாவிடையும் நடந்தது. பின்னர் பக்தர்கள் அம்மனை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலம் எடுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, பக்த சபையினர், ஊர் மக்கள் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை