மேலும் செய்திகள்
ஓடையை ஆக்கிரமித்த கோரைப் புற்கள்
12-Oct-2024
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சி போஸ் காலனி வழியாக பொத்தமரத்து ஊருணி செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே ஓடையை துார்வாரி கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சி போஸ் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் இந்த ஓடை வழியாக சிவகாசி பொத்தமரத்து ஊருணிக்கு செல்லும். ஆனால் தற்போது ஓடை முழுவதுமே பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளது. மேலும் சீமை கருவேல மரங்கள், முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது.இதனால் கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால் துர்நாற்றத்தினால் மக்கள் அவதிப்படுகின்றனர். தவிர கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுத்துகிறது. எனவே ஓடையை முழுமையாக துார்வாருவதோடு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
12-Oct-2024