உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவங்கிய நிலையில் கொலு வைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், என்.ஜி.ஓ., காலனியில் உள்ள வழிவிடு விநாயகர் கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது. இதையடுத்து தற்போது கொலு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று மாலை 6:00 மணிக்கு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு ஆண்டாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை வழிபாடு நடந்தது. நகரில் பெரிய மாரியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் நவராத்திரி கொலு பூஜை வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை