உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய பஸ் வழித்தடங்களை உருவாக்குவது அவசியம்

புதிய பஸ் வழித்தடங்களை உருவாக்குவது அவசியம்

விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மாவட்டத்தில் 9 டெப்போக்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட பஸ்கள், நான்கு வழிச்சாலை, தேசிய, மாநில, கிராமப்புற சாலை வழித்தடங்களில் இயங்கி வருகிறது. ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள், வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். போதிய பஸ் வசதி கிராமப்புறங்களில் இல்லாததால் நகர் பகுதியில் தங்கள் பணியிடங்களுக்கு வேலைக்கு டூவீலரில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் டூவீலர் விபத்துகளும், உயிர்பலிகளும், உடல் ஊனம் ஏற்படும் நிலை தினமும் நடந்து வருகிறது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி, திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகர், பாலவநத்தம் வழியாக அருப்புக்கோட்டை வரை உள்ள வழித்தடத்தில் பல கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் சிரமமின்றி வந்து செல்ல போதிய அளவிற்கு டவுன் பஸ்கள் இல்லாமல் படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர். இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில் 3 அரசு பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் டூவீலர்களில் பயணித்து விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கல்லூரி வழித்தடங்களில் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.இதே போல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தினமும் தங்களது தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக நகர் பகுதிக்கு வந்து செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குக்கிராமங்களில் உள்ள மக்கள் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு செல்ல இரண்டு பஸ்கள் மாற வேண்டிய நிலையும் காணப்படுகிறது. இதனால் புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பெருமாள் தேவன்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சிப்பி பாறை, வழியாக கோவில்பட்டி வழித்தடத்தில் ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்குகிறது. இதுவரை ஒரு அரசு பஸ் கூட இயங்கப்படவில்லை. எனவே இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்குவது அவசியம். மேலும் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆயர் தர்மம் வரை செல்லும் டவுன் பஸ் பேரையூர் வரை தடநீட்டிப்பு செய்ய வேண்டும். இதேபோல் வெம்பக்கோட்டை, திருவேங்கடம், தேவிபட்டினம், மாங்குடி பகுதிகளுக்கும் இயக்க வேண்டும்.ராஜபாளையத்திலிருந்து தளவாய்புரம், முகவூர் வழியாக சங்கரன்கோவில், சிவகாசியில் இருந்து எரிச்சநத்தம் வழியாக பேரையூர், சாத்தூரில் இருந்து கன்னி சேரி, திருத்தங்கல் வழியாக சிவகாசி, விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், காரியாபட்டியில் இருந்து மதுரை ஆரப்பாளையம், அருப்புக்கோட்டையில் இருந்து காரியாபட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி வழியாக தேனி ஆகிய புதிய வழித்தடங்களில் டவுன் பஸ்கள், ரூட் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmaraj Thangavelu
ஏப் 14, 2025 16:28

அத்தியாவசியமான கோரிக்கை


Balakrishnan Prc
ஏப் 14, 2025 15:22

மிக்க மகிழ்ச்சி.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.போக்குவரத்து பள்ளி கல்வி தனியார் வேலைக்குச் செல்ல இரு சக்கர வாகனங்களில் அதிகம் பயணித்து விபத்தில் சிக்குகின்றனர்.என ஆசிரியர் பதிவு உயிர் காக்கும் உயர்ந்த சிந்தனை நடைமுறையில் பத்திரிகை ஆசிரியர் பதிவு அரசு சம்பந்தப்பட்ட ஊருக்கு சென்று போக்குவரத்து பேருந்துகள் குறைவு நேரத்தில் வரவும் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை அவசியம்.அரசு கலைஞர் தனியார் தேசியம்.எல்லாம் சரி 50ஆண்டுகள் தேசிய மையம் பேருந்து வாழ்த்துக்கள்.தினமலர் பத்திரிகை பதிவு தமிழகம் முழுவதும் உண்டு.தமிழக முதல்வர் மக்கள் பணி உங்களின் முதல்வர் அடிப்படையில் பேருந்துகள் இயக்கி விபத்தில்லா மாநிலம் பெயரெடுக்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


J p
ஏப் 14, 2025 06:26

அரசு பேருந்து ஒட்டுநர்களாளே பொதுமக்கள் பேருந்து உள்ளேயும் சாலையிலும் பாதுகாப்பாக பயணிக்கின்றனர்...தனியார்பேருந்தால் எப்போதும் பாதுகாப்ப இல்லாத நிலையே .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை