தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார் சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை
சிவகாசி:சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. அதிகாரிகளின் ஆய்வால் பட்டாசு ஆலைகள் மூடல், அவ்வப்போது பெய்த மழை உட்பட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு, 10 சதவீதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
புது ரகங்கள் என்னென்ன?
இந்தாண்டு தீபாவளிக்கு புது வரவாக, தர்பூசணி வெடி, குங் பூ பாண்டா, ஜங்கிள் டெண்டா, பீட்சா, ஓரியோ, ஹாட் மிர்ச்சி, நருடோ அனிமேஷன், கிடார் உட்பட, பல்வேறு வகையிலான வெடிகள் மக்களை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தர்பூசணி வெடி: பற்ற வைத்தவுடன் சிவப்பு, மஞ்சள் கலரில் தீப்பொறி பறந்து சடசடவென வெடித்து மனதை கொள்ளை கொள்ளும். குங் பூ பாண்டா: இந்த வெடியை வெடித்தால், சிவப்பு, மஞ்சள் கலரில் பொறி பறந்து, 20 அடி உயரம் சென்று நீர்வீழ்ச்சி போல கீழே விழும். ஜங்கிள் டெண்டா: சிங்கம், புலி என மிருகங்களின் முக வடிவமைப்பில் உள்ள இந்த பட்டாசை பற்ற வைத்தால், மிருகங்களின் வாயிலிருந்து தீப்பொறி சீறிப் பாயும். பீட்சா: பீட்சா வடிவில் ஆறு வகைகளில் உருவாக்கப்பட்ட இந்த வெடியை பற்ற வைத்தால், பல வண்ணங்களில் சிறிய சத்தத்துடன் வெடித்து சிதறும். ஓரியோ: இதை பற்ற வைத்தால், தீப்பொறியுடன் சுற்றி சுற்றி வரும்.
Galleryஹாட் மிர்ச்சி: இதை பற்ற வைத்தால், வெடிக்கும். பயப்படாமல் கையில் பிடித்தும் வெடிக்கலாம்; அதற்காக வீட்டிற்குள் கொண்டு செல்லக்கூடாது.நருடோ அனிமேஷன்: இதை பற்ற வைத்தால், 10 அடி உயரத்திற்கு பொறியாக கிளம்பி, 20 அடி உயரம் சென்று வெடிக்கும். கிடார்: இந்த வெடியை கையில் பிடித்து வெடிக்கலாம். பற்ற வைத்தவுடன் சில்வர் கலர் தீப்பொறி பறந்து செல்லும்.