புதிய மினி பஸ் திட்டம் துவக்கம்
விருதுநகர்; விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் புதிய மினி பஸ் திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார்.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்துத் துறை சார்பில், புதிய விரிவான மினிபஸ் திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பஸ்கள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16 கி.மீ., பஸ்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் 4 கி.மீ., என மொத்தம் 20 கி.மீ., என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்க அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 131 மினி பஸ்கள் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.தற்போதைய புதிய திட்டமான இதில் 38 வழிதடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மனுக்கள் பெறப்பட்டு, 6 மினி பஸ்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 11 மினிபஸ்களுக்கு வழிதடம் நீட்டிப்பு செய்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் மாதவன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாணிக்கம், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.