துாய்மை பணியாளர்கள் இரவு கைது தவறானது
விருதுநகர்: துாய்மை பணியாளர்களின் போராட்டத்தை மரியாதை இல்லாமல் செய்யும் வகையில் இரவில் கைது செய்து சென்னை மாநகர காவல் துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது, என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பா.ஜ.,வினருக்கு மட்டும் 5 ஓட்டு, மற்றவர்களுக்கு 1 ஓட்டு, சிலருக்கு ஓட்டே இல்லை என்ற நிலையை கொண்டு வந்துள்ளனர். இதை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை. தீபாவளி பண்டிகைக்கு ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும் என பிரதமர் கூறியிருப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிறுகுறு தொழில் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பது மோடியின் சிந்தனை அல்ல, அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து அதானியை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான் அவரது சிந்தனையாக உள்ளது. ஆளுநர் ரவி தமிழகத்தின் நன்மைக்காக எப்பொழுதுமே போராடுவதில்லை. துாய்மை பணியாளர்களின் போராட்டத்தை மரியாதை இல்லாமல் செய்யும் வகையில் இரவில் கைது செய்து சென்னை மாநகர காவல் துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும். டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் கிடைக்காத வரை இதுபோன்ற முறைகேடு தொடர்ந்து நடைபெறும், என்றார்.