உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழைய கலெக்டர் அலுவலகத்தில் துாய்மைப்பணி நடக்கவில்லை

பழைய கலெக்டர் அலுவலகத்தில் துாய்மைப்பணி நடக்கவில்லை

விருதுநகர்: விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் போதுமான துாய்மை பணிகள் ஏதும் நடக்கவில்லை. வளாகம் துாசு படிந்து காணப்படுகிறது. விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகம் 2024 நவ. 10ல் திறக்கப்பட்டது. இந்நிலையில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு துறைகளாக இடமாற்றம் செய்யப்பட்டு முழுமையாக கடந்த ஏப். மாதம் தான் புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. அதற்கு அடுத்தபடியாக பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு, சி.இ.ஓ., அலுவலகம், சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தினசரி துாய்மை பணி செய்வது போல் பழைய கலெக்டர் அலுவலகத்தை பராமரிப்பது கிடையாது. இதனால் பல பகுதிகளில் சுகாதாரக்கேடு உள்ளது. வளாகங்களில் பல இடங்கள் துாசு படிந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் அலுவலர்கள், அதிகாரிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். வந்து செல்லும் மக்களும் முகம் சுழிக்கின்றனர். மழைக்காலம் என்பதால் பழைய கலெக்டர் அலுவலகத்தையும் பராமரிக்க வேண்டும். துாய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !