உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் தொடர் சாரல்மழை தரிசனத்துக்கு அனுமதியில்லை; பக்தர்கள் ஏமாற்றம்

சதுரகிரியில் தொடர் சாரல்மழை தரிசனத்துக்கு அனுமதியில்லை; பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவின்படி தற்போது தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். சில நாட்களாக கோயில் மலைப்பகுதியில் இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருவதால் மாங்கனி ஓடை முதல் பிலாவடி கருப்பசாமி கோயில் வரை பல இடங்களில் நீர் வரத்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்களை மலையேற வனத்துறை அனுமதிக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு செல்ல தாணிப்பாறை மலை அடிவாரம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தினமும் காலையில் மழையின் சூழ்நிலையை பொறுத்தே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை