உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபாவளிக்கு இல்லை சிறப்பு ரயில் விருதுநகர் மாவட்ட மக்கள் விரக்தி

தீபாவளிக்கு இல்லை சிறப்பு ரயில் விருதுநகர் மாவட்ட மக்கள் விரக்தி

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரில் இருந்து செங்கோட்டை ரயில்வே வழித்தடத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் விருதுநகர் மாவட்ட மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். விருதுநகரில் இருந்து செங்கோட்டை வரை சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், தென்காசி ஆகிய 8 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னை, கோவையில் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னையிலிருந்து பொதிகை, கொல்லம் ரயில்கள் மட்டும்தான் தினமும் இயங்குகிறது. கோவைக்கு தினசரி ரயில்கள் இல்லை. பொதிகை, கொல்லம் ரயில்களில் முன்பதிவு செய்து ஏராளமானோர் வெயிட்டிங் லிஸ்ட் நிலையில் உள்ளனர். இந்த வழித்தடத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் இயக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் விரக்தியடைந்துள்ளனர். தற்போது கூட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் கோவையில் இருந்து மதுரை வரை இயங்கும் ரயிலை செங்கோட்டை வரை தடநீட்டிப்பு செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ . மான்ராஜ் தெற்கு ரயில்வே மேலாளரிடம் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை