உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத சுகாதார வளாகம், தெரு ஆக்கிரமிப்பு; தவிப்பில் அண்ணா நகர், முனிசிபல் காலனி மக்கள்

செயல்படாத சுகாதார வளாகம், தெரு ஆக்கிரமிப்பு; தவிப்பில் அண்ணா நகர், முனிசிபல் காலனி மக்கள்

ராஜபாளையம் ; இணைப்பு ரோடு ஆக்கிரமிப்புக்கு துணை போவது, குடிநீர் தொட்டி நீண்ட மாதங்களாக சேதம் என அண்ணா நகர், முனிசிபல் காலனி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வினை எதிர்பார்க்கின்றனர்.ராஜபாளையம் நகராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் இல்லாததும், ஆண்களுக்கான வளாகம் செயல்படாததும் முக்கிய பிரச்னையாக உள்ளது. கண்மாய் ஒட்டி குடியிருப்பு பகுதிகளாக உள்ளதால் குப்பைகள் முறையாக அகற்றாமல் கழிவுகளை கொட்டுவதும் வாறுகாலில் குப்பைகள் சேர்ந்து அடைத்து மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். முனிசிபல் காலனிக்கும் அண்ணா நகருக்கும் இடைப்பட்ட 21 அடி அகல இணைப்பு ரோடு ஆக்கிரமிப்பில் உள்ளது. வாகன போக்குவரத்திற்கு கொண்டு வர நிர்வாகத்தினரே தடை ஏற்படுத்துகின்றனர்.அண்ணா நகர் கிருஷ்ணன் கோயில் எதிர் கிழக்கு பகுதியில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் ரோடு உயர்த்தி போட்டுள்ளதால் வீடுகள் பள்ளத்திற்குள் சென்று மழைக்காலங்களில் சிக்கல் ஏற்படுகிறது.குடியிருப்பு அருகே திறந்தவெளி பாராகவும், கஞ்சா உள்ளிட்ட போதை பயன்பாடும் இளைஞர்கள் இடையே அதிகரித்து வருவதால் தகுந்த பாதுகாப்பு இன்றி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். போலீஸ் ரோந்து எதிர்பார்க்கின்றனர்.

வாறுகாலில் கழிவுகள்

மகேஸ்வரி, குடியிருப்பாளர்: வாறுகால்கள் குப்பை கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசு தொல்லை புழுக்கள் போன்ற சிக்கல் உள்ளது. சுகாதார பணியாளர்கள், கவுன்சிலர் என பணிகளை தட்டிக் கேட்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதே தெரியவில்லை.

திறந்தவெளி பிரச்சனை

ஜோதி, குடியிருப்பாளர்: அண்ணாநகர் பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களுக்கான சுகாதார வளாகம் தகுந்த பாதுகாப்பு இன்றி பூட்டப்பட்டும் சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறிவிட்டது. இதனால் மெயின் ரோட்டில் இருந்து கோயிலுக்கு வரும் பாதை திறந்தவெளியாக உபயோகித்து முகம் சுழிப்பிற்கு உள்ளாகிறது.

ரோட்டினால் தினமும் பாதிப்பு

மைதீன் பீவி, குடியிருப்பாளர்: முனிசிபல் காலனி முன்பு உள்ள சிமெண்ட் ரோடு ஒரு வருடத்திற்கு முன் பணிகள் தொடங்கி தோண்டாமல் உயர்த்தி போட முயற்சித்ததை இப்பகுதியினர் எதிர்த்ததால் தற்போது வரை கிடப்பில் உள்ளது. மின்வாரிய அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, சுகாதார வளாகம் உள்ள இந்த தெருவில் மேடு பள்ளங்களால் பாதிக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ