வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் வடகிழக்கு பருவமழையில் வெள்ள பாதிப்பு, மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் சுகபுத்ரா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். பின் நிருபர்களிடம் கூறியதாவது: 2 நாட்கள் பெய்த மழையில் 2 பேர் பலி, 19 குடிசை வீடுகள் சேதம், ராஜபாளையத்தில் 35 ஆடுகள் சுவர் இடிந்து விழுந்து பலியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம், குடிசைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம், ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். எந்த சூழ்நிலையிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது, என்றார்.