என்.எஸ்.எஸ்., முகாம்
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில் நுட்பக் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா சத்திரரெட்டியபட்டியில் நடந்தது. இதில் கல்லுாரி செயலாளர் தர்மராஜன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். முதல்வர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டனர்.