உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அலையன்ஸ் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் பொன்சுப்புராஜ் மாரியப்பன் எழுதிய,கல்லான் சொல் எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.எழுத்தாளர் சங்க அமைப்பாளர் பால்சாமி தலைமை வகித்தார். அலையன்ஸ் சங்க ஆலோசகர் பெரிய மகாலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வேல்ராஜ் வரவேற்றார். அரசு வழக்கறிஞர் அன்னக்கொடி நூலை வெளியிட எழுத்தாளர்கள் லட்சுமி காந்தன், தமிழ் குமரன் பெற்றுக் கொண்டனர். பட்டய ஆளுநர் ராம் சிங் பேசினார். அலையன்ஸ் சங்க உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர், மண்டல தலைவர் இளையராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !