உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களின் எண்ணிக்கை.. அதிகரிப்பு

போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களின் எண்ணிக்கை.. அதிகரிப்பு

மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் களிலும் நாளுக்கு நாள் மக்களின் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெரு வாறுகால், கழிவு தண்ணீர் வெளியேறுவதில் இருந்து குடும்பங்களின் சொத்து பிரச்சனைகள், கொடுக்கல் வாங்கல் தகராறுகள், அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிகள், விபத்துக்கள் போன்ற புகார்கள் அதிகளவில் வருகின்றன. மேலும் கஞ்சா விற் பனையாளர்களை போலீசார் கைது செய்தாலும் பெயிலில் வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். வார விடுமுறை நாட்களில் கிராமப்புற பகுதிகளில் பல தனி நபர்கள் மது பாட்டில்கள் விற்பனையை ஒரு சுய தொழிலாகவே செய் கின்றனர். அதிலும் டாஸ்மாக் கடை விடுமுறை விடப்பட்டால் அதிகளவில் கள்ளத்தனமாக மது விற்பனை நடக்கிறது. இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தினமும் போலீசார் கண் காணித்து வழக்குகள் பதிவு செய்தாலும், நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் போதுமான அளவிற்கு போலீசார் இல்லை. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 4க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இருந்தபோதிலும் களப்பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் பல்வேறு வி.ஐ.பி.கள் வருகை, கோயில் திருவிழாக்களின் போது வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் கூடுதல் போலீசார் நியமித்தால் மட்டுமே வழக்குகளை விரைந்து முடிக்க முடியும். இதன் மூலம் நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகள் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். எனவே, மாவட்டத்தின் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப் பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி