மேலும் செய்திகள்
சத்துணவு வழங்க தாமதம் சோர்வடையும் மாணவர்கள்
04-Feb-2025
நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் ஜன., 22 உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட அலுவலர்களை கொண்டு திட்டங்களின் முன்னேற்ற நிலை கள ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி தாமோதரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முத்துராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு மையங்களை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்து கலெக்டர் ஆய்வுக்கூட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மையத்திற்கு வராமல் காய்கறிகள் வாங்கி கொடுக்காமல், தரமற்ற மதிய உணவு வழங்கியதாக புகார் தெரிவித்தார். கலெக்டர் ஜெயசீலன், சத்துணவு அமைப்பாளர் போர்விஜயனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். உதவியாளர் சஸ்பெண்ட்
நரிக்குடி புல்வாய்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில், மையத்தை சுகாதாரமாக வைக்காதது, தரமற்ற உணவு தயார் செய்து வழங்கியதாக சமையல் உதவியாளர் கருப்பாயியை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
04-Feb-2025