சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியில் சார் பதிவாளர் அலுவலகத்தை 2 அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியை சுற்றி 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பத்திரப்பதிவு செய்ய கமுதி, பந்தல்குடி உள்ளிட்ட பத்திர அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு எம்.ரெட்டியபட்டியில் புதிய பத்திர பதிவு அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டது.நேற்று வாடகை கட்டடத்தில் புதிய பத்திரப்பதிவு அலுவலகத்திற்காண திறப்பு விழா நடந்தது. இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தனர். கலெக்டர் ஜெயசீலன், கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனம், துணை பதிவுத்துறை தலைவர் செந்தமிழ் செல்வன், மாவட்ட பதிவாளர் குணசேகரன், சார்பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.