மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத மூன்று பேர் மரணம்
17-Sep-2024
வத்திராயிருப்பு, : சதுரகிரி மலை அடிவாரம் தாணிப்பாறை அருகே 65 வயது மதிப்பு தக்க முதியவர் மயங்கி கிடந்த நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் யாரென வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.செப்.10ல் தாணிப்பாறை அடிவாரம் ஆர்.எஸ்.மடம் அருகில் 65 வயதுடைய முதியவர் மயங்கி கிடந்துள்ளார். அவருக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.அவர் யாரென அடையாளம் கண்டு கொள்ள எந்தவித ஆவணமும் இல்லாததால் சதுரகிரி பக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இதுவரை உறவினர்கள் யாரும் வராத நிலையில் வி.ஏ.ஓ. வெள்ளத்துரை புகாரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
17-Sep-2024