உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

சாத்துார்:சாத்துார் வேப்பிலை பட்டியைச் சேர்ந்தவர் காந்திமதி, 71.நேற்று முன்தினம் காலையில் வாசல் தெளிப்பதற்காக வீட்டை திறந்து வெளியே வந்த போது படியில் கிடந்த பாம்பு அவரை காலில் கடித்தது. அரசு மருத்துவமனையில் பலியானார். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மது பாட்டில்கள் பறிமுதல் சாத்துார், ஜூலை 25-- சாத்துார் இருக்கன்குடியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், 59.காட்டுப்பகுதியில் மது விற்றார்.அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 180 மி.லி.அளவுகொண்ட 101 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ