உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூ வீலர்கள் மீது கார் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்

டூ வீலர்கள் மீது கார் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்

சாத்துார் : சாத்துார் தாயில் பட்டி டி.கோட்டையூர் சேர்ந்தவர் சதிஷ் குமார், 25. டூ வீலர் ஓட்ட பின்னால் எஸ்.பி.எம்.தெரு கரன் பாண்டியன்,25. உட்கார்ந்து வந்தார். மற்றொரு டூவீலரில் கட்டணஞ் செவல் சரவணக்குமார் 25, ஓட்டி வந்தார். மூவரும் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மடத்துப்பட்டியில் இருந்து தாயில் பட்டிக்கு டூவீலரில் மூவரும் வந்தபோது எதிரில் தாயில்பட்டி கட்டணஞ் செவல் ராமமூர்த்தி, 35. ஓட்டி வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெம்பக் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி