உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், செவல்பட்டியில் லட்சுமி பட்டாசு ஆலை நடத்துகிறார். நாக்பூர் உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி சிவகாசி மீனம்பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி 19, மணி மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.அப்போது மருந்து எதிர்பாராமல் கீழே விழுந்ததில் வெடித்துச் சிதறியது. அங்கு பட்டாசு மூலப்பொருளை ஆட்டோவில் கொண்டு வந்த அம்மையார்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் உடல் கருகி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குருமூர்த்தி சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி