மேலும் செய்திகள்
நான்கு வழிச்சாலை ரயில்வே பாலப் பணிகள் விறுவிறு
24-Jun-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் முறையான கண்காணிப்பு இல்லாததால் திறந்த வெளி பார், இரவு ஓட்டல்கள், பார்க்கிங் என மாறி வருவதை அரசு நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ராஜபாளையம் கிழக்குப் பகுதி சத்திரப்பட்டி வழியே செல்லும் வெம்பக்கோட்டை ரோட்டில் தடையற்ற போக்குவரத்திற்காக ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலத்தின் துாண்களுக்கு இடையே உள்ள வெற்றிடங்களை பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டு ஆக்கிரமித்து வருகின்றனர். பாலத்தின் கிழக்குப் பகுதி டாஸ்மாக் கடை எதிரே உள்ள இடத்தை எந்நேரமும் திறந்த வெளி பாராக மாற்றியும் மேற்கு பகுதியான ஸ்ரீரங்க பாளையம் அருகே உள்ள இடங்களை இரவு நேர ஓட்டல்களாகவும், பார்க்கிங் பகுதியாகவும் மாற்றி வைத்துள்ளனர்.இதனால் பெண்கள், தொழிலாளர்கள் அச்சமின்றி சென்று வரும் சூழல் மாறி உள்ளதுடன், டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து கடக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாநகரங்களில் மேம்பாலத்திற்கு கீழ் தடுப்பு ஏற்படுவது போல் பாதுகாப்பு செய்தோ நகராட்சி, பொதுப்பணித்துறை சார்பில் கடைகளுக்கு இடம் ஒதுக்கி வருவாய் முறைப்படுத்துவதோ மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
24-Jun-2025