கட்டடங்கள் திறப்பு
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பணிகள் முடிந்த புதிய கட்டடங்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். தோட்டி லோவன்பட்டியில் அங்கன்வாடி மையம், சிவனைந்தபுரம் ஊராட்சியில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடம், சண்முகாபுரத்தில் புதிய சமுதாய கூட கட்டடம், சிந்தப் பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார் ராஜாமணிமற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.