மேலும் செய்திகள்
ரேஷன் கடையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
11-Jan-2025
நரிக்குடி: நரிக்குடி சுள்ளங்குடியில் தினமலர் செய்தி எதிரொலியால் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.நரிக்குடி சுள்ளங்குடியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 137 ரேஷன் அட்டைகள் உள்ளன. ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., தூரம் உள்ள நல்லக்குறிச்சிக்கு சென்றனர். போக்குவரத்து வசதி சரி வர இல்லாததால் கண்மாய் வழியாக குறுக்குப் பாதையில் நடந்து சென்று வந்தனர். மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் 5 கி.மீ., துாரம் சுற்றிச் சென்று வந்தனர்.பெரிதும் சிரமம் ஏற்பட்டதால் பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக ஆய்வு செய்து பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த உத்தரவிட்டார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ரேஷன் கடை அமைக்கப்பட்டு விடும் என கிராமத்தினர் சார்பாக எலக்ட்ரானிக் தராசு, டேபிள் வாங்கினர்.இதுகுறித்து சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் அதிகாரிகள் பகுதி நேர ரேஷன் கடை அங்குள்ள நாடக மேடையில் தற்காலிகமாக திறந்து, வாரத்தில் வியாழன், சனிக்கிழமை பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
11-Jan-2025