திருவண்ணாமலை கோயில் உண்டியல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம் முடிந்த நிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று மதியம் நடந்தது. செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் அறநிலைத்துறையினர், பக்தர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 21 உண்டியல்களில் இருந்து ரூ. 12 லட்சத்து 8 ஆயிரத்து 840 காணிக்கையாக வரப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.